"மாரீசன்" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்

'மாரீசன்' திரைப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த படத்துக்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'மாரீசன்' திரைப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி வெளியாகி வரவேற்பை பெற்றன. இதற்கிடையில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தணிக்கை வாரியம் மாரீசன் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழை வழங்கியுள்ளது.






