'டென் ஹவர்ஸ்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட மாரி செல்வராஜ்

சிபி சத்யராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'டென் ஹவர்ஸ்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட மாரி செல்வராஜ்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு "டென் ஹவர்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இப்படம் ஒரு நாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் 'டென் ஹவர்ஸ்' படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com