சிரஞ்சீவி , நயன்தாரா படத்தின் அடுத்த பாடல்...புரோமோ வெளியீடு


MegaVictoryMass Song Promo out now
x
தினத்தந்தி 27 Dec 2025 7:45 PM IST (Updated: 27 Dec 2025 7:45 PM IST)
t-max-icont-min-icon

இந்த படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

அடுத்தாண்டு பொங்கல் சீசன் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி வருகிறது. பல படங்கள் வெளியாகின்றன. அதில், சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள "மன சங்கர வர பிரசாத் கரு" படமும் ஒன்று.

இந்த படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் வெங்கடேஷ், கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார்.

அனில் ரவிபுடி இயக்கிய “மன சங்கர பிரசாத் கரு” படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் சாஹு கராபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்திலிருந்து ’மெகா விக்டரி மாஸ்’ என்ற பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது. முழு பாடல் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story