'மெய்யழகன்' படத்தில் கமல் பாடிய 'யாரோ இவன் யாரோ' பாடல் வெளியீடு

நடிகர் கார்த்தியின் 'மெய்யழகன்' படத்தில் கமல் பாடிய 'யாரோ இவன் யாரோ' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
Published on

சென்னை,

நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் 2டிஎன்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 27ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைப்பெற்றது. படத்தின் இடம் பெற்றுள்ள 6 பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் மகத்துவத்தைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'யாரோ இவன் யாரோ' எனும் வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் பாடலின் வரிகளை உமா தேவி எழுதியிருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com