'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 - முக்கிய அப்டேட் கொடுத்த நடிகை


Millie Bobby Brown Drops MAJOR HINT On Stranger Things Season 5, Says ‘It Will Be…’
x
தினத்தந்தி 28 Feb 2025 10:30 AM IST (Updated: 3 Jun 2025 8:55 AM IST)
t-max-icont-min-icon

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

சென்னை,

ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது 5-வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். சமீபத்தில், இந்த தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியானது.

இந்த ஆண்டு இது வெளியாக உள்ளது. இதனையடுத்து, இதன் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் லெவன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மில்லி பாபி பிரவுன் அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'பொறுமையாக இருங்கள். உங்கள் காத்திருப்புக்கு நியாயம் செய்யும் வகையில் படம் இருக்கும். அதற்கு நான் உறுதியளிக்கிறேன்' என்றார்.

1 More update

Next Story