''கூலி'' திரைப்படம் - திரையரங்கில் புகுந்த வெள்ளம்


Movie Coolie - Flood in theatre
x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான திரைப்படம் 'கூலி'.

சென்னை,

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் கனமழை காரணமாக திரையரங்கிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதன் காரணமாக ரஜினிகாந்த் நடித்துள்ள ''கூலி'' திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும்நிலையில், முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது.


1 More update

Next Story