'என் மனம் ஒருபோதும் அதை கண்டு அஞ்சுவதில்லை' கங்கனா ரனாவத்


My mind is never afraid of it: Kangana Ranaut
x

கங்கனா ரணாவத் வயது அதிகமாவது பற்றி பேசினார்

சென்னை,

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'கேங்ஸ்டர்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். ரவிமோகன் நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான 'எமர்ஜென்சி' படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கங்கனா ரணாவத் வயது அதிகமாவது பற்றி பேசினார். அவர் கூறுகையில், ' நான் வயதைப் பற்றி ஒரு போதும் யோசித்ததில்லை. ஆன்மீகத்தால் நிறைந்த என் மனம் ஒரு போதும் வயதை கண்டு அஞ்சுவதில்லை. திரை உலகில் வெள்ளை முடியை பார்த்து பயப்படும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அரசியலில் அப்படி இல்லை. வயதாவதும் ஒரு மகிழ்ச்சிதான்' என்றார்

1 More update

Next Story