'எனது அடுத்த படம் நாட்டை பெருமைப்படுத்தும்' - அட்லீ


My next film will make the country proud - Atlee
x

அட்லீயின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார்.

சென்னை,

'ராஜா ராணி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' என அடுத்தடுத்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தை இயக்கி பாலிவுட்டிலும் அறிமுகமானார். இப்படம் ரூ1,200 கோடி வசூல் செய்தது.

இதனையடுத்து, அட்லீயின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ஏ6' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பேபிஜான் பட புரமோஷனில் 'ஏ6' படத்தின் அப்டேட்டை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனது அடுத்த படம் உண்மையில் அதிக நேரத்தையும் சக்தியையும் எடுக்கும். நாங்கள் கிட்டத்தட்ட ஸ்கிரிப்டை முடித்துவிட்டோம். மிக விரைவில், கடவுளின் ஆசீர்வாதத்துடன் ஒரு பெரிய அறிவிப்பு வரும். இப்படம் நாட்டை பெருமைப்படுத்தும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் எங்களுக்குத் தேவை' என்றார்.

1 More update

Next Story