விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ தோல்வி படமா? - தயாரிப்பாளர் பதில்

கிங்டம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுவதற்கு தயாரிப்பாளர் நாக வம்சி பதிலளித்துள்ளார்.
சென்னை,
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கிங்டம், பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்ததாகக் கூறப்படும் தகவலுக்கு தயாரிப்பாளர் நாக வம்சி பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "இந்தப் படம் வட அமெரிக்காவில் மட்டும் 1.8 மில்லியன் வசூலித்தது, நிஜாம் பகுதியில் ரூ.12 கோடி வசூலித்தது. இதை எப்படி தோல்வி படம் என்று சொல்ல முடியும்?. இது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. அதேவேளை தோல்வியடையவும் இல்லை," என்றார்.
இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 31 ம் தேதி திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
Related Tags :
Next Story






