''நம்மில் யாரிடமும் ரூ. 3,000 கோடி படங்கள் இல்லை'' - ராஷ்மிகாவை புகழ்ந்த நாகார்ஜுனா


Nagarjuna praises Rashmika: None of us have Rs 3000 crore films, she is the one
x

'குபேரா' படத்தின் மூன்றாவது பாடலின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வின்போது, ​​ நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனாவை புகழ்ந்தார்.

மும்பை,

மும்பையில் நடைபெற்ற 'குபேரா' படத்தின் மூன்றாவது பாடலின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வின்போது, நடிகர் நாகார்ஜுனா, நடிகை ராஷ்மிகா மந்தனாவைப் புகழ்ந்தார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் 'குபேரா' திரைப்படம், வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் மூன்றாவது பாடலான 'பீப்பி பீப்பி டும் டும் டும்' பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அப்போது நாகார்ஜுனா, ராஷ்மிகாவை புகழ்ந்து பேசினார்.

அவர் கூறுகையில், " திறமையின் பவர்ஹவுஸ் ராஷ்மிகா மந்தனா. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான அவரது திரைப்படங்களை பாருங்கள். நம்மில் யாரிடமும் ரூ. 2000 முதல் 3000 கோடி வசூல் செய்த படங்கள் இல்லை. அவர் நம் அனைவரையும் மிஞ்சி இருக்கிறார்'' என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட துறைகளில் வெளியான ராஷ்மிகா மந்தனாவின் படங்களின் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனகள் படைத்திருப்பதை இது காட்டுகிறது.

1 More update

Next Story