''கூலி'' - லோகேஷ் என்னிடம் கேட்ட முதல் கேள்வி... - நாகார்ஜுனா


Nagarjuna says playing Rajinikanths villain in Coolie is liberating
x

'கூலி' படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வில்லனாக நடிக்கிறார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் , லோகேஷ் கனகராஜை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில், ''லோகேஷ் என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க விரும்பியதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, வில்லனாக நடிக்க உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா?. அதற்கு சரி என்றால், நாம் பேசுவோம் என்றுதான்.

நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும், முதலில் ஸ்கிரிப்டைக் கேட்க விரும்பினேன். எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்தது. இப்போது யாராவது 'கூலி'யில் என் கதாபாத்திரம் எப்படி இருக்குன்னு கேட்டால், ஒரே வார்த்தையில பதில் சொல்லுவேன்" என்றார்.

1 More update

Next Story