'குபேரா' படத்தின் டீசர் எப்போது? படக்குழு அறிவிப்பு!

‘குபேரா’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
'குபேரா' படத்தின் டீசர் எப்போது? படக்குழு அறிவிப்பு!
Published on

சென்னை,

'ராயன்' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 51-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'குபேரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது, ஹைதராபாத்தில், தனுஷின் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், படத்தின் டீசரை வருகிற 15ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com