3-வது முறையாக இணையும் நானி-சாய் பல்லவி?

இயக்குனர் சேகர் கம்முலா, நானியை மனதில் கொண்டு ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாக தெரிகிறது.
சென்னை,
நடிகர் நானியின் சமீபத்திய படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. தற்போது அவர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் “தி பாரடைஸ்” படப்பிடிப்பில் மும்முரமாக ஈடு பட்டுள்ளார். படத்தில் “ஜடல்” என்ற கதாபாத்திரத்தில் அவரது தோற்றம் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில், இயக்குனர் சேகர் கம்முலா நானியை மனதில் கொண்டு ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி வருவதாக தெரிகிறது. மேலும், இதில் நடிகை சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாய் பல்லவி முன்பு “பிடா” மற்றும் “லவ் ஸ்டோரி” ஆகிய படங்களில் சேகர் கம்முலாவுடன் பணியாற்றி இருந்தார். மேலும், நானியுடன் எம்.சி.ஏ மற்றும் ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கம்முலாவின் மூலம் நானியும் சாய் பல்லவியும் படத்தில் 3-வது முறையாக இணைவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






