'லோகா' யுனிவெர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்கள்...அறிமுகப்படுத்திய படக்குழு

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ''லோகா - சாப்டர் 1'', பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
சென்னை,
'லோகா' யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான ''லோகா - சாப்டர் 1'', பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கியுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
உலகளவில் ரூ. 200 கோடி மைல்கல்லை எட்டி ''லோகா'' சாதனை படைத்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 'லோகா' யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி, இதில் நடிகர் துல்கர் சல்மான் ''சார்லி'' என்ற கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் ''மைக்கேல்'' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
Related Tags :
Next Story






