ராபின்ஹுட்டை அல்லு அர்ஜுனின் இந்த படத்துடன் ஒப்பிட்ட நிதின்

ராபின்ஹுட்டை அல்லு அர்ஜுனின் சூப்பர்ஹிட் படமான ஜூலாயியுடன் ஒப்பிட்டு நிதின் பேசி இருக்கிறார்.
சென்னை,
வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் , ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராபின்ஹுட்'. இப்படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ராபின்ஹுட்டை அல்லு அர்ஜுனின் சூப்பர்ஹிட் படமான ஜூலாயியுடன் ஒப்பிட்டு நிதின் பேசி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "படம் எப்படி இருக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றால், அல்லு அர்ஜுனின் ஜூலாயியுடன் ராபின்ஹுட்டை ஒப்பிடலாம்.
ஜூலாய் படத்தில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையேயான மைண்ட் கேம்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. மேலும், நல்ல நகைச்சுவையும் இருந்தன. ராபின்ஹுட்டிலும் அது உள்ளது. இப்படத்தில், எனக்கும் தேவதத்தா நாகேவுக்கும் இடையே மைண்ட் கேம்கள் உள்ளன, அவை உங்களை கவர்ந்திழுக்கும்.
ஜூலாய் படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஜேந்திர பிரசாத் காம்போ காட்சிகளை மக்கள் எப்படி ரசித்தார்களோ, அதேபோல ராபின்ஹுட்டையும் மக்கள் ரசிப்பார்கள். இது அனைத்தையும், டிரெய்லர் உங்களுக்கு தெரியப்படுத்தும்' என்றார்.






