நிவின் பாலியின் “சர்வம் மயா” படத்தின் டீசர் வெளியானது

அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘சர்வம் மாயா’ படம் டிசம்பரில் வெளியாகிறது.
Published on

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 'பாச்சுவும் அற்புத விளக்கும்' பட இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சர்வம் மாயா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தினை இயக்கிய சத்தியன் அந்திகாட்டின் மகன்தான் அகில் சத்யன். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடிகை பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிவின் பாலியின் பிறந்த நாளை முன்னிட்டு நிவின் நடித்து முடித்த சர்வம் மயா திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அகில் சத்யன் இயக்கிய இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com