"ஓஹோ எந்தன் பேபி" படத்தின் "காதல் எட்டிப்பாக்க" வீடியோ பாடல் வெளியீடு

நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' படம் மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் விஷ்ணு விஷால். இவருடைய தம்பி ருத்ரா 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

'ஓஹோ எந்தன் பேபி' படத்தில் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி'படத்தின் 'காதல் எட்டிப்பாக்க' பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com