ஸ்லிம்மாக இருக்க ஊசி... - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா

தமன்னா இப்போது கதாநாயகியாக நடிக்காமல் சிறப்பு பாடல்களில் அதிகம் நடித்து வருகிறார்.
சென்னை,
உடல் எடை அதிகரித்ததால், ஸ்லிம்மாக இருக்க ஓசெம்பிக் போன்ற ஊசிகளை நடிகை தமன்னா பயன்படுத்தியதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. இதற்கு சமீபத்திய பேட்டியில், தமன்னா பதிலளித்தார். 'நான் ஸ்லிமாக இருக்க ஊசிகளைப் பயன்படுத்துகிறேன் என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை. என் கெரியரின் தொடக்கத்தில் நான் எப்படி இருந்தேனோ அப்படியேதான் இருக்கிறேன்.
எனக்கு நான் புதிதாகத் தெரியவில்லை. பொதுவாக, பெண்களின் உடல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாறும். அதேபோல்தான் நானும். எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது," என் வதந்திகளுக்கு தமன்னா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமன்னா இப்போது கதாநாயகியாக நடிக்காமல் சிறப்பு பாடல்களில் அதிகம் நடித்து வருகிறார். அவர் சிறப்புப் பாடல்களில் நடித்த ஒஎரும்பாலான படங்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






