ரீ-ரிலீஸில் கில்லியை ஓரங்கட்டும் “படையப்பா” படத்தின் வசூல்

ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸில் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறது.
50 ஆண்டுகளாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் ‘படையப்பா’ ரீ-ரிலீஸானது. சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர். சென்னை ரோகினி திரையரங்கில் ‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் கண்டுகளித்தனர்.
பல திரைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் ரீ-ரிலீஸிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது..
மேலும், வெளியான இரண்டு நாள்களிலேயே ரூ. 8 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்தாலும் சில திரைப்படங்களே மீண்டும் வெற்றி பெறுகின்றன.
விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. தற்போது, படையப்பாவுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் கில்லியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.






