ஆர்வத்தை தூண்டிய ''பரதா'' டிரெய்லர்... படம் திரைக்கு வருவது எப்போது?


Paradha trailer: A unique coming-of-age story of a spirited young woman
x

சினிமா பண்டி மற்றும் சுபம் போன்ற பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

சென்னை,

கடைசியாக ''ஜானகி'' படத்தில் நடித்திருந்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது தனது அடுத்த படமான ''பரதா''வின் ரிலீஸுக்கு தயாராகி வருகிறார்.

சினிமா பண்டி மற்றும் சுபம் போன்ற பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வருகிற 22-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், நடிகர் ராம் பொதினேனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த டிரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தர்ஷனா ராஜேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பரதா, கிராமத்தைச் சேர்ந்த சுப்பு என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மேலும், இதில் ராக் மயூர், சங்கீதா க்ரிஷ், ராஜேந்திர பிரசாத் மற்றும் ஹர்ஷா வர்தன் ஆகியோரும் உள்ளனர்.

1 More update

Next Story