''தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த்''...வைரலாகும் ''பரம் சுந்தரி'' பட டிரெய்லர்


Param Sundari trailer: Fun, romance and Rajinikanth in Janhvi-Sidharths love story
x

இப்படம் வருகிற 29-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜான்வி கபூரின் 'பரம் சுந்தரி' படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டுள்ளது.

தினேஷ் விஜனின் மோடாக் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூரும் பரம் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த்தும் நடித்துள்ளனர்.

'தேவரா' திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் வருகிற 29-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் ஜான்வி கபூர் மலையாளத்திற்கு மோகன்லால், தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் என்று கூறும் வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 More update

Next Story