''உஸ்தாத் பகத் சிங்'' படப்பிடிப்பில் இணைந்த பவன் கல்யாண்.... வைரலாகும் வீடியோ


Pawan Kalyan back on Ustaad Bhagat Singh sets, makers release video
x

ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ இசையமைக்கிறார்.

சென்னை,

'ஹரி ஹர வீர மல்லு' மற்றும் 'ஓஜி' படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு, நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திருயுமான பவன் கல்யாண் தற்போது 'உஸ்தாத் பகத் சிங்' படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார்.

இது குறித்த வீடியோவை படக்குழு பகிர்ந்திருக்கிறது. ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் படம் 'உஸ்தாத் பகத் சிங்'. ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ இசையமைக்கிறார்.

அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்தப் படம் தளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story