''கூலி'' படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி


Permission granted for special screening of the film Coolie
x
தினத்தந்தி 12 Aug 2025 6:34 PM IST (Updated: 12 Aug 2025 7:18 PM IST)
t-max-icont-min-icon

'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் வருகிற 14-ம் தேதி ரிலீசாக இருக்கும்நிலையில், சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

அதன்படி, ரிலீஸ் நாளில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

1 More update

Next Story