தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்.. குழிதோண்டி புதைப்பது போல் உள்ளது- பாடகர் சத்யன்


தயவு செய்து இதைச் செய்யாதீர்கள்.. குழிதோண்டி புதைப்பது போல் உள்ளது- பாடகர் சத்யன்
x
தினத்தந்தி 15 Sept 2025 3:02 PM IST (Updated: 15 Sept 2025 5:03 PM IST)
t-max-icont-min-icon

சில மீடியாக்கள் அவர்களின் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளை பரப்புகின்றனர் என பாடகர் சத்யன் மாகலிங்கம் கூறியுள்ளார்.

சென்னை,

‘ரோஜா ரோஜா’ பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் பாடகர் சத்யன் மகாலிங்கம். 26 வருடங்களுக்கு முன் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலை ஒரு நிகழ்ச்சியில் சத்யன் மகாலிங்கம் பாடினார். அப்போது அவர் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், சத்யன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி. உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், சில மீடியாக்கள் அவர்களின் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர். இது, இத்தனையாண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனை குழிதோண்டி புதைப்பது மாதிரி... தயவு செய்து இதைச் செய்யாதீர்கள். நல்ல விஷயங்களுக்கு காலம் எடுக்கும். ஆனால், கெட்டவை உடனே பரவும். அதனால், அடிப்படை அறத்துடன் நடந்துகொள்ளுங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.

1 More update

Next Story