"கூலி" படத்தில் ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?


கூலி படத்தில் ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?
x
தினத்தந்தி 19 Feb 2025 12:31 AM IST (Updated: 26 Feb 2025 7:35 PM IST)
t-max-icont-min-icon

நடிகை பூஜா ஹெக்டே "கூலி" படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது.


இதற்கிடையில் இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story