கவனம் பெறும் பிருத்விராஜின் “விலாயத் புத்தா” டிரெய்லர்


கவனம் பெறும் பிருத்விராஜின் “விலாயத் புத்தா” டிரெய்லர்
x
தினத்தந்தி 15 Nov 2025 2:16 PM IST (Updated: 15 Nov 2025 2:17 PM IST)
t-max-icont-min-icon

ஜெயன் நம்பியார் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.

சந்தன மரக்கடத்தல்களை மையமாகக் கொண்டு பிரபல மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘விலாயத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஜெயன் நம்பியார் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். படத்தில் நடிகர்கள் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை படமாக இயக்கி நடித்திருந்த பிருத்விராஜ் மீண்டும் நாவலை தழுவிய படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘விலாயத் புத்தா’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

1 More update

Next Story