தயாரிப்பாளர் ராமநாதன் காலமானார்


தயாரிப்பாளர் ராமநாதன் காலமானார்
x
தினத்தந்தி 7 April 2025 5:50 PM IST (Updated: 7 April 2025 5:55 PM IST)
t-max-icont-min-icon

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ராமநாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சென்னை,

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ராமநாதன், நடிகர் சத்யராஜிற்கு நீண்ட காலமாக மேலளாராக பணியாற்றியுள்ளார். இவரது தயாரிப்பில், வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் ஆகிய படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க ,பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்ச் செல்வன் படத்தையும் ராமனாதன் தயாரித்துள்ளார்.

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ராமநாதன் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72. ராமநாதனுக்கு பிரமிளா என்ற மனைவியும் காருண்யா, சரண்யா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் சென்னை வந்ததும் புதன் கிழமையன்று இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story