பூரி ஜெகநாத் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தபு நடிக்கவுள்ள பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை சம்யுக்தா இணைந்துள்ளார்.
பூரி ஜெகநாத் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.மேலும் 'கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000ம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர். இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்திய அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார்.

படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com