விஜய் சேதுபதி - சம்யுக்தா மேனன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இப்படத்தில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் பூரி ஜெகநாத், விஜய் சேதுபதியுடன் ஒரு படத்திற்காக கைகோர்த்துள்ளார். சம்யுக்தா மேனன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் செப்டம்பர் 23 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு துயர சம்பவம் காரணமாக அது தள்ளிப்போனது.
இப்படத்தில் தபு, துனியா விஜய் மற்றும் பிரம்மாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார்.
Related Tags :
Next Story






