மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்தாரா ரஜினி?


Rajinikanth rejects the script narrated by this young director
x

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்து வருகிறார். 'கூலி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாதநிலையில், இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story