ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி...தயாரிக்கும் கமல்ஹாசன்


Rajinikanths 173rd film to be directed by Sundar C...produced by Kamal Haasan
x

ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் அதிகமாக பரவி வந்தன. இந்நிலையில், ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கிறது. இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

1 More update

Next Story