4 நாட்களில் ரூ. 404 கோடி வசூலித்த ரஜினியின் “கூலி”


4 நாட்களில்  ரூ. 404 கோடி வசூலித்த  ரஜினியின் “கூலி”
x
தினத்தந்தி 18 Aug 2025 7:32 PM IST (Updated: 21 Aug 2025 12:26 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் 4 நாட்களில் ரூ. 404 கோடி வசூலை எட்டியுள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

‘கூலி’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. இந்தப் படம் மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக, இந்த சாதனையை விஜய்யின் 'லியோ' வைத்திருந்தது. இது ஐந்து நாட்களில் அதை எட்டியது. இதன் மூலம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக லியோ படத்தின் முதல் நாள் வசூலையும் கூலி படம் முந்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு இருந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த வகையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ‘கூலி’ படம் உலகளவில் ரூ. 404 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story