ராம் சரணின் 17-வது படம்...புஷ்பா இயக்குனருடன் பேச்சுவார்த்தை


Ram Charan and Sukumar fly to Abu Dhabi
x

ராம் சரணின் 17-வது படத்தை புஷ்பா இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராம் சரணின் 17-வது படத்தை புஷ்பா இயக்குனர் சுகுமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. துபாயில் இதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு இணையும் பட்சத்தில் இது அவர்களது 2-வது படமாக அமையும் . இதற்கு முன்பு சுகுமார் இயக்கத்தில் 'ரங்கஸ்தலம்' படத்தில் ராம் சரண் நடித்திருந்தார்.


1 More update

Next Story