'டிராகன்' படத்திற்கு ரிவ்யூ கொடுத்த ராம் சரண் பட இயக்குனர்

'டிராகன்' படம் தெலுங்கில் 'ரிட்டன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் வெளியானது.
சென்னை,
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் டிராகன். இப்படம் தெலுங்கில் 'ரிட்டன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் வெளியானது. பலரது பாராட்டுகளை பெற்று, வெற்றிப்படமாக இது அமைந்திருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'உப்பென்னா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவரும் தற்போது ராம்சரணின் படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் புச்சி பாபு சனா, 'டிராகன்' படத்திற்கு ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிராகன் படத்தை பார்த்தேன். ஒரு நல்ல மெசேஜுடன் கூடிய உணர்ச்சிகரமான, அதேசமயம் பெர்பெக்ட்டான பொழுதுபோக்கு படம். பிரதீப் ரங்கநாதன் இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் விதமாக என்ன ஒரு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். கிளைமாக்ஸ் சூப்பராக இருந்தது" என்று கூறியுள்ளார்.






