ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹாரர் படம் - ஊட்டியில் தொடங்கிய படப்பிடிப்பு


Rashmika Mandanna kicks off the Ooty leg of ‘Thama’ shoot
x

இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத ராஷ்மிகா மந்தனா தற்போது அந்த பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு 'தாமா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'முஞ்யா' இயக்குனர் ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு ஊட்டியில் துவங்கி இருப்பதாக ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். மேலும், 2 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story