பாக்ஸ் ஆபீஸில் மோதும் ராஷ்மிகா, அனுஷ்கா?


Rashmika Mandanna vs Anushka Shetty: Box Office Clash on September 5?
x

2 படங்களும் ஒரே நாளில் திரைக்கு வர உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

சென்னை,

ராஷ்மிகா மந்தனா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் பாக்ஸ் ஆபீஸில் மோத தயாராகி வருகின்றனர்.

தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் ராஷ்மிகா மந்தனா, ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ''தி கேர்ள்பிரண்ட்'' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

படத்தின் முதல் பாடலான ''நதிவே'' நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், செப்டம்பர் 5-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மறுபுறம், கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான காதியும் அதே தேதியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பெண்ணை மைய கதாபாத்திரமாக கொண்டுள்ள இந்த 2 படங்களும் ஒரே நாளில் திரைக்கு வர உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

1 More update

Next Story