ராஷ்மிகா மந்தனாவுக்கு முகத்தில் சிகிச்சை: போட்டோவுக்கு ‘போஸ்’ தர மறுப்பு

மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து வந்த ராஷ்மிகா, போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, இப்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தம்மா’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ‘காக்டெயில் 2’ என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார். தற்போது பெண்களை மையமாக கொண்ட தி கேர்ள் பிரண்ட் படத்தில் நடித்துள்ளார். ராகு ரவீந்திரன இயக்கிய இந்தப் படத்தில் தீட்சித் ஷெட்டி ஹீரோவாக நடித்துள்ளார்.
அவர் விமான நிலையம் வந்தால் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கம். ஆனால், மும்பை விமான நிலையத்துக்கு மாஸ்க் அணிந்து நேற்று முன்தினம் வந்த அவர், போஸ் கொடுக்க மறுத்துவிட்டார். மாஸ்க்கையும் நீக்க மறுத்த அவர், முகத்தில் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து அவருக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அவர் அழகுக்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.






