ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு


ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2025 4:07 PM IST (Updated: 9 Jun 2025 4:11 PM IST)
t-max-icont-min-icon

ரவி மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு 'புரோ கோட்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, 'டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிகர் ரவிமோகன் நடிக்க உள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தை ரவிமோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது. இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரவி மோகன்-கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு 'புரோ கோட்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இயக்குநர் கார்த்திக் கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகுமென கூறியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிமல், அர்ஜுன் ரெட்டி போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.

1 More update

Next Story