விஜய் தேவரகொண்டாவுடன் சிறப்புப் பாடலில் நடிக்கத் தயார்...51 வயது நடிகை பேச்சு

கிங்டமுக்கு பிறகு விஜய்தேவரகொண்டா, ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிக்கிறார்.
சென்னை,
விஜய் தேவரகொண்டா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் கிங்டம் திரைப்படம் மூலம் வெற்றியைப் பெற்றார். இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார். கிங்டமுக்கு பிறகு விஜய்தேவரகொண்டா, ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில்.. 51 வயதான பிரபல நடிகை விஜய் தேவரகொண்டாவுடன் சிறப்புப் பாடலில் நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா..? நடிகை கஸ்தூரி சங்கர்தான்.
சமீபத்தில், அவர் ஒரு ஷோவில் பங்கேற்றார். அப்போது தொகுப்பாளர், சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்பட்டால்.. விஜய் தேவரகொண்டாவின் சகோதரியாக நடிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு கஸ்தூரி , சகோதரி கதாபாத்திரம் அல்ல...குறைவான சம்பளம் கொடுத்து அவருடன் சிறப்புப் பாடலில் நடிக்க சொன்னால் கூட அதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். தற்போது, இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.






