சுவாசிகாவின் ’ஷம்பாலா’ பட டிரெய்லரை வெளியிட்ட பிரபாஸ்...வைரல்

இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரில்லர் படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் ஆதி சாய்குமார் கதாநாயகனாக ஷம்பாலா: எ மிஸ்டிகல் வேர்ல்ட் படத்தில் நடித்திருக்கிறார். உகாந்தர் முனி இயக்கியுள்ள இந்தப் படம் பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அர்ச்சனா ஐயர், லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா விஜய், மதுநந்தன், ரவிவர்மா, மீசாலா லக்சுமன், ஷிஜு மேனன், இந்திராணி, மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
ஷைனிங் பிக்சர்ஸ் பேனரின் கீழ் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் ஷம்பாலாவை தயாரிக்கின்றனர், ஸ்ரீசரண் பகாலா இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரில்லர் படம் டிசம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், பிரபாஸ் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






