சொந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கும் பிரபல பாலிவுட் நட்சத்திரம்?


Reports about Star Hero launching a production house are untrue
x

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்

மும்பை,

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். சிங்கம் அகெய்ன் படத்தில் கடைசியாக நடித்திருந்த இவர் தற்போது புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இந்தசூழலில், இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்க உள்ளதாகவும், விரைவில் ஒரு முன்னணி இயக்குனரை வைத்து ஒரு படம் பண்ண உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியநிலையில், ரன்வீர் சிங் குழு அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

அதன்படி அந்த குழு , "இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அவர் தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு, வரவிருக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார், "என்று தெரிவித்துள்ளது.


1 More update

Next Story