கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாளில் வீடியோ வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு


Retro film crew releases video on Karthik Subbarajs birthday
x

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் ’ரெட்ரோ’

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் 'ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படமானது மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.

இன்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும்நிலையில், 'ரெட்ரோ' படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

1 More update

Next Story