தனது அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் தேஜா சஜ்ஜா

அவரது அடுத்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜாம்பி ரெட்டியின் 2-ம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை,
நடிகர் தேஜா சஜ்ஜா, அனுமான் மற்றும் மிராய் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களுடன் திரையுலகில் அசத்தி வருகிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.
அவரது அடுத்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜாம்பி ரெட்டியின் 2-ம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தநிலையில், 2-ம் பாகத்தை அவருடன் பணியாற்றிய வேறொருவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
ஜாம்பி ரெட்டி 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மிராய் 2 படத்தின் பணிகளை அவர் விரைவில் தொடங்க உள்ளார்.
Related Tags :
Next Story






