லிடியன் நாதஸ்வரத்தை சிம்பொனி எழுத சொன்னதாக பரவிய தகவல் - இளையராஜா விளக்கம்

லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசை வெளியிட உள்ளார்.
சென்னை,
'இசைஞானி' இளையராஜா இயற்றியிருக்கும் மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த 'வேலியண்ட்' பாரம்பரிய சிம்பொனி இசை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த 8-ம் தேதி அரங்கேற்றப்பட்டது.
இதன் மூலம் ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி இசை வெளியிட உள்ளார்.
சிம்பொனி எழுத இளையராஜா தன்னை ஊக்கப்படுத்தியதாக கூறியிருந்தார். இதனையடுத்து இளையராஜா, லிடியன் நாதஸ்வரத்தை சிம்பொனி எழுத சொன்னதாக இணையத்தில் பரவ தொடங்கியது. இந்நிலையில், அதற்கு இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில்,
"லிடியன் நாதஸ்வரம் சிம்பொனி கம்போஸ் பண்ணதாக ஒரு டியூனை என்னிடம் போட்டு காண்பித்தார். இது சிம்பொனி இல்லை சினிமா பாடல்போல் உள்ளது, சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு கம்போஸ் பண்ணு என கூறினேன். லிடியன் என்னுடைய ஒப்புதல் அங்கீகாரத்திற்காக வந்தார். என்னை யாரும் முன்மாதிரியாக எடுத்து நடக்க வேண்டாம்" என்றார்.






