சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?


சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?
x

சிவகார்த்திகேயன் ‘குட் நைட்’ பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்

அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்திலும் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றப் போவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது

இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story