பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்த சாய்பல்லவி


Sai Pallavi shares school memories
x

நீலகிரியில் சாய் பல்லவி படித்த பள்ளியின் ஆண்டு விழா கடந்த 23-ம் தேதி நடந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் நடிகை சாய் பல்லவி . இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தவர். இந்த பள்ளியின் ஆண்டு விழா கடந்த 23-ம் தேதி நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட சாய்பல்லவி, பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்துகொண்டார் அப்போது அவர் கூறுகையில்,

'இந்த பள்ளிக்குள் நுழைந்த போதே பழைய நினைவுகள் வரத்தொடங்கின. இப்போது, நான் பேசிக் கொண்டிருக்கும் ஆடிட்டோரியத்தில்தான் நான் அதிக நேரம் செலவிடுவேன். வகுப்பை கட் அடித்து விட்டு இங்குதான் நடன பயிற்சி செய்வேன்.

நான் வகுப்பில் இல்லாதது எனது ஆசிரியைகளுக்கு தெரியும். ஆனாலும், எனது முயற்சி தெரிந்து என்னை கண்டித்தது இல்லை. இளம் வயதிலேயே மேடை பயம் என்பது எனக்கு இல்லாமல் போனதுதான் நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமென்று நினைக்கிறேன்' என்றார்.

1 More update

Next Story