"உங்களுக்கு என்ன பிரச்சினை?" – ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் பற்றிய கேள்விக்கு சல்மான் கான் பதில்


Salman Khan on 31-year age-gap with Rashmika: Will even work with her daughter
x

'சிக்கந்தர்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகாமந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிக்கந்தர். இப்படம் வருகிற 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.

இதில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர் ஒருவர், ராஷ்மிகாவுக்கும், சல்மான் கானுக்கும் உடனான வயது வித்தியாசம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சல்மான்கான் பதிலளிக்கையில்,

"இதில் கதாநாயகிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவரது தந்தைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாதபோது, உங்களுக்கு என்ன தம்பி பிரச்சினை?' என்றார்.

1 More update

Next Story