''கல்வான்''...படப்பிடிப்புக்கு தயாராகும் சல்மான் கான்


Salman Khan’s Battle Of Galwan Set To Go On Floors This August
x
தினத்தந்தி 20 July 2025 4:45 PM IST (Updated: 20 July 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை,

சல்மான் கானின் ''கல்வான்'' படப்பிடிப்பு ஆகஸ்ட் தொடக்கத்தில் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அதற்காக சல்மான் தயாராகி வருகிறார். படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் 'கல்வான் ' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில், சல்மான் கான் இரத்தக்கறை படிந்த முகத்துடனும், கோபமான கண்களுடனும் காணப்பட்டார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.சல்மான் கானின் முந்தைய வெளியீடான 'சிக்கந்தர்' படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் இப்படத்தின் மீது உள்ளது.

1 More update

Next Story