சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு - சமந்தா நெகிழ்ச்சி பதிவு..!


சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு - சமந்தா நெகிழ்ச்சி பதிவு..!
x
தினத்தந்தி 3 March 2025 8:58 PM IST (Updated: 3 March 2025 9:02 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி உணர்வுடனும், ஆசிர்வதிக்கப்பட்டவராகவும், அன்பானவராகவும் உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகை சமந்தா சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த விண்ணைதாண்டி வருவாயா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சமந்தா பானா காத்தாடி படத்தின் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சினிமா பக்கம் திரும்பியுள்ளார். அதற்கு முன்னதாக பாலிவுட்டில் வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார்.

நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு சினிமாவின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில்தான் சமந்தா சினிமாவில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில், தனது புகைப்படங்களை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். தனது 15 ஆண்டு சினிமா வாழ்க்கையை கொண்டாடும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட சமந்தா ஆசிர்வதிக்கப்பட்டது, நன்றி, அன்பானவராக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். நன்றி சென்னை என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story