’2026-ல் என்னுடைய தீர்மானம் இதுதான்’...உங்களுடையது என்ன?: கவனத்தை ஈர்த்த சமந்தாவின் பதிவு

2026 -ம் ஆண்டை வரவேற்க சமந்தா தயாராகி வருகிறார்.
சென்னை,
2025 ஆம் ஆண்டு சமந்தாவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்தது. நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, சமீபத்தில் இயக்குனர் ராஜ் நிதிமோருவை மணந்தார்.
திருமணத்திற்குப் பிறகு தனது வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்க முயற்சிக்கிறார் சமந்தா. அமைதியான மனதுடனும் தெளிவான எண்ணங்களுடனும் 2026 ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகி வருவதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 2026-ல் என்னுடைய தீர்மானம் இதுதான் என்றும் உங்களுடையது என்ன? என்றும் சமூக ஊடகங்களில் அவர் சமீபத்தில் பதிவிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமந்தா தற்போது "மா இன்டி பங்காரம்" படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
Related Tags :
Next Story






